பெருந்துயரம்... பிச்சை எடுத்து சாப்பிட சொன்ன மகன்... விரக்தியில் தம்பதியர் தற்கொலை!
ராஜஸ்தான் மாநிலம் நாகவுரை சேர்ந்தவர் ஹசாரிராம் (70). இவரது மனைவி சவுலி தேவி (68). இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், ஹசாரிராம் மற்றும் அவரது மனைவி வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டை சோதனையிட்டபோது, இருவரும் சுவரில் கடிதம் எழுதி வைத்திருந்தனர். தங்கள் மகன் ராஜேந்திரன் 3 முறையும், மற்றொரு மகன் சுனில் 2 முறையும் அடித்ததாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இருவரது மகள்களும் இதைப் பற்றி சொல்லக்கூடாது என்றும், சொன்னால் இரவில் தூக்கத்தில் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டினர்.
"எங்கள் பிள்ளைகள் சொத்துக்கள் அனைத்தையும் தங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும். உறவினர்களும் உடந்தையாக இருந்தனர். ஏற்கனவே மோசடி செய்து எங்களிடம் இருந்து 3 நிலம் மற்றும் காரை பறித்துவிட்டனர். சுனில் மற்றும் அவரது மனைவி அனிதா அவர்கள் பெயரில் வீடு வாங்கினார்கள். பிறகும் எல்லாவற்றையும் வாங்கி, எங்களுக்கு உணவு கொடுக்காமல் சித்திரவதை செய்தார்கள்.
நாளுக்கு நாள் திட்டினார்கள். மகன் சுனில் தட்டை எங்களிடம் கொடுத்து பிச்சை எடுக்க சொன்னார், என்னால் சாப்பாடு கொடுக்க முடியாது என்றும், ஏதாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டினார். அதனால் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடிதத்தை தொடர்ந்து, தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் எங்களைப் பற்றி இல்லாத தகவல்களை பெற்றோர் எழுதி வைத்துள்ளதாக போலீசில் கொடுத்த மனுவில் சுனில் குறிப்பிட்டுள்ளார். பெற்றோரின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
