மதுபாட்டில்களுடன் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து.. பெட்டி பெட்டியாக பாட்டில்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்!

 
லாரி விபத்து லாரி விபத்து
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் மாவட்டத்தில் போயினபள்ளி என்ற இடத்தில் நேற்று காலை மதுபாட்டில்களை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி ஒன்றுஎதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் லாரியின் அருகே காப்பாற்றுவதற்காக சென்று பார்த்தனர்.

அப்போது லாரியில் மதுபாட்டில்கள் ஏற்றிச் செல்லப்பட்டதை அறிந்த பொதுமக்கள், லாரியின் கிளீனரையும், ஓட்டுநரையும் காப்பாற்றுவதை விட்டு விட்டு, லாரியில் இருந்து கீழே விழுந்து உடையாமல் இருந்த அட்டைப்பெட்டிகளுடன் கூடிய மதுபாட்டில்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். விபத்து நடந்த லாரி ஓட்டுநரும், கிளீனரும் பொருட்களை விட்டுச் செல்லுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டும் அதை யாரும் கண்டுக் கொள்ளவில்லை.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்தவர்களை விரட்டியடித்தனர். கூட்டம் கலைந்து சென்ற பின்னர் போலீசார் எத்தனை அட்டைப்பெட்டிகளை எடுத்து சென்றனர் என்று தெரியவில்லை. அதன் பின்னர் மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு, மதுபாட்டில்களை அதில் ஏற்றி அனுப்பி வைத்தனர். லாரி கிளீனர் மற்றும் டிரைவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!