அடிக்கடி தனிமையில் உல்லாசம்... மாமியாரை திருமணம் செய்த மருமகன்!

 
பீகார்

அடிக்கடி தனிமையில் மாமியாருடன் உல்லாசம் இருந்து வந்த நிலையில், இவர்களது கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததால், மாமனாரே தனது மனைவியை மருமகனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் எப்ப வேணா, யார் கூட வேணா வரும் என பல சினிமாக்களில் பஞ்ச் டயலாக்  கேட்டிருக்கிறோம்.  பல இடங்களில் இதனை தவறாக அர்த்தம் கற்பித்துக் கொண்டு சமூகத்தில் ஏற்றுக் கொள்ளாதவற்றை நடைமுறைப்படுத்தி விடுகின்றனர். அங்கே தான் உறவில் சிக்கல்களும், பிரச்சனைகளும் உருவாகின்றன. அதே போல் ஒரு காதல் பலரை  "என்ன கொடுமை சரவணன் இது.." என பேச வைத்துள்ளது.  பீகாரில் பாங்கா நகரில் வசித்து வருபவர்  சிக்கந்தர் யாதவ். இவரது மனைவி, சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

திருமணம் கல்யாணம் கும்பம்

இதனையடுத்து  தனது மனைவியின் தந்தை திலேஷ்வர் தார்வே  தாய் கீதா தேவியும் அவர்களுடனே தங்கிவிட்டனர்.  இதில், திலேஷ்வருக்கு வயது 55. அவரது மனைவி  கீதா தேவிக்கு 45 வயது. ஒரே வீட்டில் இருந்த சமயத்தில் சிக்கந்தருக்கும், அவரது உயிரிழந்த மனைவியின் தாயார் கீதா தேவிக்கும் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இவர்களின் நெருக்கத்தை நேரில் பார்த்த கீதா தேவியின் கணவர்,  ஒரு வேளை கள்ளத்தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகம்  எழுந்துள்ளது.  இது குறித்து அவர் மேலும் துருவி துருவி விசாரித்ததன் பேரில்  ஒரு முறை இருவரையும் கையும் களவுமாக பிடித்துவிட்டார். அப்படியே விடாமல்   திலேஷ்வர் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டார்.  பஞ்சாயத்து கூட்டத்தில், கிராமத்தார் முன்னிலையில் தனது மாமியாருடன் காதல் ஏற்பட்டதாக  சிக்கந்தர் யாதவ் வெளிப்படையாக கூறினார்.  

 

அக்னியை வலம் வரவில்லைஇ என்றால் திருமணம் செல்லாது
சிக்கந்தரின் பேச்சை கேட்ட பஞ்சாயத்தினர் அவரின் சம்மதத்துடனும் கீதா தேவியின் சம்மதத்துடனும் இருவருக்கும் அனைவர் முன்னிலையிலும் திருமணம் செய்து வைத்தனர். பஞ்சாயத்தில் இருவருக்கும் திருமணம் நடந்தது மட்டுமின்றி சட்டப்படி இதனை நீதிமன்றத்திலும் பதிவு செய்தனர்.  கீதா தேவியின் முதல் கணவர் திலேஷ்வரே நடத்தி வைத்தது தான் இதில் ட்விஸ்ட்.  திருமணத்தை நடத்தி முடித்து கீதா தேவியை அவரது முன்னாள் மருமகன், அதாவது தற்போதைய கணவர் சிக்கந்தர் வீட்டிற்கு அவரே அழைத்து சென்றார்.  இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!