தினமும் ஆபாச ரீல்ஸ் எடுத்த மனைவி... அடுத்து நடந்த கொடூரம்!

 
ஆபாச ரீல்ஸ் ஆபாச ரீல்ஸ்

உலகம் முழுவதும் இன்ஸ்டா ரீல்ஸ்  பலரது வாழ்க்கையைப் பதம் பார்த்து வருகிறது. சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படும் அளவுக்கு ரீல்ஸ் வீடியோக்களுக்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்நிலையில் தினமும் ஆபாசமாக ரீல்ஸ் வீடியோ எடுத்த மனைவி குறித்து கணவர் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ சான்றுகளின் அடிப்படையில், வழக்கு முழு அளவில் விசாரிக்கப்படுகிறது என உதவி கமிஷனர் சித்தார்த் கவுதம் கூறியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்தவர் அனீஸ். இவருடைய மனைவி இஷ்ரத். இன்ஸ்டாகிராமில் இஷ்ரத், ஆபாச படங்களாக எடுத்து, அவற்றை வெளியிட்டு வந்துள்ளார். இது அனீசுக்கு எரிச்சல் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து பேசினால், அவரை அச்சுறுத்தும் வகையில் இஷ்ரத் நடந்து கொண்டிருக்கிறார். மனைவியின் செயல்கள் பற்றி அனீஸ் கூறும்போது, பொய்யான வழக்குகளை போட்டு விடுவேன் என தன்னை அச்சுறுத்தி வந்ததுடன், ஒரு முறை கத்தியால் தாக்கியும் உள்ளார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

இன்ஸ்டா

இது பற்றிய வீடியோ ஒன்றை போலீசிடம் காட்டியுள்ளார். இதற்காக நீண்ட காலத்திற்கு மனைவியுடன் அவர் போராடி வந்திருக்கிறார். அவருக்கு வேறு ஆண்களுடன் தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டும் அனீஸ், பெரும்பாலான நேரம் செல்போனிலும், சமூக ஊடகத்திலும் நேரம் செலவிடுவார். இதனால், வீட்டுக்கு தேவையான வேலைகளை கூட செய்யாமல் புறந்தள்ளியுள்ளார் என வேதனையுடன் கூறினார்.

இன்ஸ்டா

இது குறித்து கேட்டால், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவதுடன், தன்னையும் குடும்பத்தினரையும் பொய்யான வழக்குகளில் இழுத்து விட்டு விடுவேன் என மிரட்டியும் வந்திருக்கிறார் என அனீஸ் கூறுகிறார். இது குறித்து லோனி காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது. வீடியோ சான்றுகளின் அடிப்படையில், வழக்கு முழு அளவில் விசாரிக்கப்படுகிறது என உதவி கமிஷனர் சித்தார்த் கவுதம் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?