நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை அங்கன்வாடிகளை மூட உத்தரவு!

 
அங்கன்வாடி மையத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
 நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை அங்கன்வாடி மையங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களிலும் கோடை வெயில் முடிவடைதாலும் வெப்ப சலனம் அதிகரித்து காணப்படுகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகள், இணைநோய் இருப்பவர்கள், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், இவர்களைத் தனியே அனுப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெப்ப அலையால் பலர் சுருண்டு விழுந்து பலியாகும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் கடும் வெப்பம் காரணமாக டெல்லியில் அனைத்து அங்கன்வாடி மையங்களும் ஜூன் 30 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

அங்கன்வாடி

அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் டெல்லி உட்பட   வடமாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயில் காலம் தொடங்கியது முதலே இந்தியா முழுவதும்  குறிப்பாக, வட மாநிலங்களில் வெயில் வாட்டிவதைக்கிறது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக  49 டிகிரியை தாண்டியதால் கடுமையான வெப்ப அலை நிலவியது.

தமிழக அரசு அதிரடி! அங்கன்வாடி மையங்களில் சத்துணவு!
கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் அதிகப்பட்ச வெப்பநிலையாக 52.3 டிகிரி செல்ஸியஸ் பதிவானது. இதனால்  மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  நாக்பூரில் 52.9 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.  

இந்நிலையில் குழந்தைகளின் உடல்நிலையை கருத்தில் கொண்டு  கடும் வெப்பம் காரணமாக டெல்லியில் அனைத்து அங்கன்வாடி மையங்களும் ஜூன் 30 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  உத்தரவை மீறி அங்கன்வாடிகள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web