இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு அபார் கார்டு... இனி ஒரே நாடு... ஒரே அடையாள அட்டை!

 
அபார் கார்டு

ஏற்கெனவே இந்தியா முழுவதும் ஆதார் கார்டு கொண்டு வந்துள்ள நிலையில், தற்போது இந்திய மாணவர்கள் அனைவருக்கும் அபார்  என்ற பெயரில், புதிதாக அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலமாக இந்திய மாணவர்கள் அனைவரையும் ஒரே நாடு ஒரே அடையாள அட்டை என்பதன் கீழ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

ப்ரீ கே.ஜி முதல் பிஎச்டி.வரை, போலி சான்றிதழ் முறைகேட்டை தடுக்கவும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், மத்திய அரசு புதிய அடையாள அட்டையை கொண்டுவந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு, ஒரு அடையாள அட்டையை அறிமுகம் செய்கிறது.  இந்த அட்டைக்கு அபார் - APAAR அடையாள அட்டை என்று பெயர் வைத்துள்ளது.

அபார் என்றால், "தானியங்கு நிரந்தர கல்வி கணக்கு பதிவு" என்று அர்த்தம். சுருக்கமாக சொல்லப்போனால், அபார் அட்டையின் அடிப்படை தகவல்கள், அவர்களது ஆதார் தகவல்களில் இருந்தே எடுக்கப்பட்டதாக இருக்கும். ஆதார் கார்டில் இருப்பதைப் போலவே, அபார் கார்டிலும் 12 இலக்க எண்கள் இடம் பெற்றிருக்கும்.  மாணவர்களின் மதிப்பெண், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள்  குறித்த தகவல் அனைத்துமே, இந்த அபார் ஐடியில் இணைக்கப்பட்டு விடும். 

இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லூரி மாறுதல் வேலைக்கு செல்லுதல் உள்ளிட்ட இடங்களில் அபார் ஐ. டி யைக் காண்பித்தாலே போதும், அவர்களின் முழு விவரங்களையும் நிறுவனங்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும். மாணவர்களின் முன்னேற்றம், செயல்பாடுகளை கண்காணிக்க வாழ்நாள் முழுவதும் இந்த அடையாள எண் வழங்கப்படும். மாணவர்கள் எங்கே படிக்கிறார்கள்? கல்லூரிக்கு செல்கிறார்களா? அல்லது படிப்பை பாதியில் நிறுத்துகிறார்களா? போன்ற விவரங்களையும் இதன் அட்டை மூலம் கண்காணிக்க முடியும். பள்ளி இடைநிற்றலையும் இந்த அட்டையை கொண்டு தடுக்க முடியும்.

ஆசிரியர் அரசு பள்ளி வகுப்பறை மாணவர்கள்

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில், இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் கருத்து கேட்புக்குப்பிறகே, இதற்கு ஒப்புதல் வழங்கப்படும். இதுகுறித்து, விரிவான அறிவிப்புகள் அடுத்த ஆண்டு  துவக்கத்திலேயே வெளிவர உள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள்  நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web