உடனே செக் பண்ணுங்க... இன்று தமிழகம் முழுவதும் வெளியாகிறது வாக்காளர் இறுதி பட்டியல்!

 
இலவச மாற்று வாக்காளர் அடையாள அட்டை! தேர்தல் ஆணையம் !

இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் சில  மாதங்களே உள்ள நிலையில், இன்று தமிழக வாக்காளர்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு வெளியிடுகிறார். உடனே மிஸ் பண்ணாம, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என மறக்காம லிஸ்ட் பார்த்து ஒரு முறை செக் பண்ணிக்கோங்க. 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இவ்வாண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள், கூட்டணிகளை இறுதி செய்வது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, கட்சியினரை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் இறுதி வாக்காளர் பட்டியல் இறுதிப்படுத்தும் பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

நாளை வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்

இதையொட்டி கடந்த சில மாதங்களாக, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவற்றிற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று திருத்தங்கள் செய்து கொள்ள விண்ணப்பித்திருந்தனர். இதனிடையே தேர்தல் நெருங்குவதை அடுத்து, இந்த காலக்கெடு நீட்டிக்கப்படாமல், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

நாளை வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்

தற்போது இந்த பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, இன்று சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர்கள், அந்தந்த மாவட்டங்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web