அசத்தல்... 10ம் வகுப்பு தேர்வில் 6 பாடத்திலும் 100க்கு 100 எடுத்து மாணவி சாதனை!

 
அதிதி

பஞ்சாப் பள்ளிக் கல்வி வாரியம் (பிஎஸ்இபி) 2024 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது. ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 97.2% ஆகும். மாணவிகள் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் 98.11 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளனர். மாணவர்கள் 96.47% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அதிதி, அலிஷா ஷர்மா மற்றும் கர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் சிறந்த மதிப்பெண்களுடன் அதிக மதிப்பெண் பெற்றவர்கள். அதிதி 650க்கு 650 மதிப்பெண்கள் பெற்று 100% தேர்ச்சி பெற்றுள்ளார். அலிஷா சர்மா மற்றும் கர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் தலா 645 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வசிக்கும் அதிதி, பஞ்சாப் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்றதோடு மட்டுமல்லாமல், 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். பஞ்சாப் வாரியத் தேர்வில் அதிதி மாணவி 650க்கு 650 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அதிதியின் அப்பா சிறிய பான் கடை நடத்தி வருகிறார். அவரது தாயார் இல்லத்தரசி. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அதிதி, ஒவ்வொரு பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அனைவரையும் ஆச்சரியத்திலும், உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளார்.

லூதியானாவின் சிம்லாபுரியில் உள்ள தேஜா சிங் இன்டிபென்டன்ட் சீனியர் செகண்டரி பள்ளியின் மாணவி அதிதி கூறுகையில், “போர்டு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்று எனக்கு தெரியும், நம்பிக்கையும் இருந்தது. ஆனால், ஒவ்வொரு பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண் எடுப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றார் ஆச்சரியத்துடன். எதிர்காலத்தில் மருத்துவம் படித்து 'காஸ்மெடிக் சர்ஜன்' ஆக விரும்புவதாக மாணவி அதிதி கூறினார்.

அதிதி தன் வெற்றிக்கான முழுக் கிரெடிட்டையும் தன் பெற்றோருக்கு அர்ப்பணித்தார். குடும்பம் பொருளாதார ரீதியாக வலுவாக இல்லாவிட்டாலும், அதிதியின் படிப்பில் அவளது பெற்றோர் சமரசம் செய்து கொள்ளவில்லை. அதிதி தினமும் 5 மணி நேரம் படித்துள்ளார். தேர்வுக்கு முந்தைய விடுமுறை நாட்களில் மாணவி படிப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். தேர்வு காலத்தில் இரவு முழுவதும் படித்து வெற்றியை பதிவு செய்தார்.

முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்கள்: 

தரவரிசை 1
அதிதி (650 மதிப்பெண்கள், 100% தேர்ச்சி) தேஜா சிங் சுதந்திர நினைவு மூத்த மேல்நிலைப் பள்ளி, சிம்லா பூரி (லூதியானா).

தரவரிசை 2
அலிஷா ஷர்மா (645 மதிப்பெண்கள், 99.23% தேர்ச்சி) தேஜா சிங் சுதந்திர நினைவு மூத்த மேல்நிலைப் பள்ளி, சிம்லா பூரி (லூதியானா).

தரவரிசை 3
கர்மன்ப்ரீத் கவுர் (645 மதிப்பெண்கள், 99.23% தேர்ச்சி) ஆம்பர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, நவன் தனால், தெஹ் பாபா பகாலா (அமிர்தசரஸ்).

 தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web