தீபாவளி கொண்டாட்டம்... இன்று முதல் 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை அறிவிப்பு!

 
மெட்ரோ ரயில்

இன்று முதல் சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையடுத்து, பலரும் சொந்த ஊருக்கு ச் சென்று, சொந்த பந்தங்களோடு தீபாவளி கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் பொதுமக்கள் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் என ஷாப்பிங் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  

நாளை மறுதினம் சனிக்கிழமை துவங்கி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை என தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் செல்ல லட்சக்கணக்கான மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காகத்  திட்டமிட்டு  ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.  

மெட்ரோ ரயில்

இவர்களின் தேவைகள் மற்றும் வசதிகளின் அடிப்படையில் இன்று நவம்பர் 9 ம்தேதி வியாழக்கிழமை மாலை முதல் சென்னை கோயம்பேடு,எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அதிகளவு மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து மெட்ரோ ரயில் சார்பாக பயணிகள் வசதிக்காக கூடுதல் ரயில் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மெட்ரோ
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ  ரயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, இன்று நவம்பர் 9ம் தேதி, நவம்பர் 10, நவம்பர் 11ம் தேதி சனிக்கிழமை வரை இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ யில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  இந்த மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவை இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மட்டுமே என்பதையும்  சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web