அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தீபாவளி பரிசு ரூ.490... வங்கி கணக்குகளில் வரவு!

 
தீபாவளி

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை குடும்பத்தோடு கொண்டாடும் வகையில், தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, புதுவையிலும் திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசி, சர்க்கரை வழங்குவதற்கு பதிலாக, அதற்கு ஈடான தொகை ரூ.490 தீபாவளி பரிசாக அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பர்ச்சேஸ்! மக்கள் வெள்ளத்தில் தடுமாறும் கடை வீதிகள்!

டெல்லி காற்று மாசு காரணமாக மூச்சு திணறுகிறது. இந்நிலையில், பட்டாசுகளை வெடிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது காலை 6 மணி முதல் 7மணி வரையிலும், இரவு 7மணி முதல் 8மணி வரையிலும் என 2மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சீன வகை பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என பல்வேறு வழிகாட்டுதல்களை அறிவுறுத்தி உள்ளது. 

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்படுவதைப் போல, புதுவையில் தீபாவளி இலவச தொகுப்பிற்கு பதிலாக ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்குகளில் ரூ.490 செலுத்தப்படும் என புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.

ரேஷன்

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்ச்சகரைக்கு இணையாக தொகையாக இந்த ரூ.490 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ச் உமார் 3 லட்சத்து 37 ஆயிரத்து 406 குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குகளில் சுமார் ரூ.16.53 கோடி செலுத்தப்படும் என புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web