தினமும் ஆரஞ்சு சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா? மிஸ் பண்ணாதீங்க!

 
ஆரஞ்சு

தினந்தோறும் ஒரு பழம் சாப்பிடுவது உடலில் தேவையில்லாத நச்சு கழிவுகளை அகற்றும், அதிலும் தினந்தோறும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் நம்  உடலில் ஏற்படும் மாற்றங்களும், எவ்வளவு நன்மைகள் என்பதையும் பார்க்கலாம் வாங்க.

நம் உடலுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிட்ரஸ் பழங்கள் மிக அவசியம். ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதுடன், அதிகம் சாப்பிட்டால், சருமம் நன்கு பொலிவுடன் இருக்கும். வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன.

மேலும் ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். குறிப்பாக ஆரஞ்சுப் பழத்தை ஆண்கள் அதிகம் சாப்பிட வேண்டும். இப்போது அந்த ஆரஞ்சுப் பழத்தை சாப்பிடுவதால், வேறு என்ன நன்மைகளைப் பெறலாம் என்பது கொடுக்கப்பட்டுள்ளது.

Orange

ஆரோக்கியமான இதயம்:

ஆஞ்சில் பொட்டாசியம் என்னும் கனிமச்சத்து நிறைந்துள்ளது. இது இதயத்தை சீராக இயக்கக்கூடிய ஒரு பொருள். மேலும் உடலில் எப்போது பொட்டாசியம் சத்துக் குறைகிறதோ, அப்போது தான் இதயத்தில் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது நல்லது.

மலச்சிக்கல்:

ஆரஞ்சுப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.

பொலிவான சருமம்:

ஆரஞ்சு பழத்தில் பீட்டா கரோட்டீன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. ஆகவே இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், சூரியக் கதிர்களால் சரும செல்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். மேலும் முதுமைத் தோற்றமும் தடைபடும்.

Skin

கண் பார்வை:

கரோட்டினாய்டு என்னும் பொருள் ஆரஞ்சுப் பழத்தில் அதிகம் இருப்பதால், அதனை சாப்பிடும் போது, அது உடலில் வைட்டமின் ஏ சத்தானது மாறி, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாதவாறு தடுக்கும்.

எடை குறைவு:

ஆரஞ்சு பழத்தை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி, கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.

சிறுநீரக நோய்கள்:

தினமும் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதிலும் சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க முடுயும். குறிப்பாக, ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது அதில் அதிகப்படியான சர்க்கரை போட வேண்டாம். ஏனெனில் அவை பற்களை சொத்தையாக்கிவிடும்.

உயர் இரத்த அழுத்தம்:

ஹெஸ்பெரிடின் என்னும் ஃப்ளேவோனாய்டு, ஆரஞ்சுப் பழத்தில் நிறைந்திருப்பதால், அதனை தினமும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தமானது குறைவதோடு, அதில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.

ஆரோக்கியமான விந்தணு:

ஆரஞ்சு பழம் ஆண்களுக்கு மிகவும் சிறந்த பழம். ஏனெனில் அந்த பழத்தை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுக்களானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், ஆரஞ்சுப் பழத்தை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web