அட்சய திருதியைக்கு இதை எல்லாம் தானம் செய்தால் செல்வம் கொட்டும்!

 
தானம்

இன்று அட்சய திருதியை முன்னிட்டு இதை தானம் செய்தால் வீட்டில் செல்வம் நிரந்தரமாக தங்கும். இல்லத்தில் மகிழ்ச்சி குடிபுகும். தங்கத்திற்கும் அட்சய திருதியைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கல்யாணத்திற்கு நகை வாங்குபவர்கள், அதற்கான முதல் தங்கத்தை இன்று வாங்க துவங்கலாம். இன்று வாங்குகிற, செய்கிற செயல்கள் பெருகும் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும் திருதியை திதி வரும் என்றாலும் சித்திரை மாதத்தில் வருகிற திருதியை திதியை அட்சய திருதியை என்கிறோம். 

அட்சய திருதியை அன்று தான் அஷ்டலட்சுமிகளும் அவதாரம் எடுத்தார்கள். இதே போன்றதொரு அட்சய திருதியை நாளில் தான் விஷ்ணுவின் மார்பில் திருமகள் இடம் பிடித்தாள். இத்தகைய சிறப்புடைய நன்னாளில் தான் என்ன காரியம் செய்தாலும் வெற்றி நமக்கே என்பதை கொண்டாடும் வகையில் தான் அட்சய திருதியை அனுசரிக்கப்படுகிறது.

தானம்

அட்சயதிருதியை என்பது வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் செய்வதற்கும் சிறந்த நாள். ஏழை , எளிய மக்களுக்கு நம்மால் இயன்றவரை இந்நாளில் தானம் செய்திட சுபிட்சமான வாழ்வு அமையும் என்பது ஐதிகம். செல்வத்தை அள்ளித்தரும் இந்த நன்னாளில் தானங்கள் செய்பவர்களுக்கு புண்ணியம் பல மடங்கு பெருகும். என்னென்ன தானம் வழங்கினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க. இன்று தவிக்கிற வாய்க்கு தண்ணீரை தானமாக வழங்கினால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு இன்றைய தினம் தண்ணீர் கொடுத்து தாகம் போக்கினால் இறையருளை பெறலாம்.

அதே போன்று இன்று குங்குமத்தை தானமாக வழங்கினால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிட்டும். மஞ்சளை தானமாக வழங்கினால் தீர்க்க சுமங்கலி யோகம் பெறலாம். அருகில் உள்ள ஏதோவொரு அம்மன் கோவிலுக்குச் சென்று அங்கு வருகின்ற சுமங்கலிகளுக்கு குங்குமத்தையும், மஞ்சளையும் தந்தால், தாலி பாக்கியம் பலப்படும்.

அட்சய திருதியை
வெல்லம், நெய், உப்பு இவைகளை தானமாக வழங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். புத்தாடைகள் தானமாக கொடுத்தால் இறைவனின் ஆசியை பெறலாம்.  பால், தயிர் தானமாக வழங்கினால் செல்வ செழிப்பை பெறலாம். சந்தனத்தை தானமாக வழங்கினால்  ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.  இந்நாளில்  குலதெய்வத்தை பிரார்த்தித்து , இஷ்ட தெய்வத்தை வணங்கி இயன்ற அளவு தானம் செய்திட வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web