பிரபல சின்னத்திரை நடிகைக்குத் திருமணம்... பிரபலங்கள் வாழ்த்து!

 
ஹர்திகா

’கார்த்திகை தீபம்’ சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ஹர்திகாவுக்கு இன்று காலை திருமணம் நடைப்பெற்றது. திரையுலகினரும், சின்னத்திரை நடிக, நடிகைகளும் மணமக்களுக்கு நேரில் கலந்து கொண்டு, தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது திருமண விழா முடிந்த நிலையில், திருமண புகைப்படங்களை நடிகை ஹர்திகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹர்திகா திருமணம்

’செம்பருத்தி’ சீரியலுக்குப் பிறகு நடிகர் கார்த்திக் ராஜ் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார். இதில் தீபா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக ஹர்திகா நடித்து வருகிறார். நிறம் என்பதைத் தாண்டி நிறமும் குணமும் தான் முக்கியம் என்பதை புரிய வைத்து கதாநாயகனுடன் எப்படி சேர்கிறார் என்பது தான் ’கார்த்திகை தீபம்’  தொடரின் கதைக்களம். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வரும் நிலையில் ஹர்திகாவுக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ஹர்திகா

தனது வாழ்வின் சிறந்த தருணங்கள் எனச் சொல்லி இந்தப் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஹர்திகா. மணமகன்  கேரளாவை சேர்ந்தவர் என்பதால் இவரின் திருமணம் அவரின் குடும்ப வழக்கப்படி நடந்து முடிந்துள்ளது. ஹர்திகாவுக்கும் அவரது கணவருக்கும் ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் தங்களது திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web