இதைச் செய்தா யானைகளுக்கு கோபம் வரும்... இளம்பெண்ணை தூக்கி வீசிய வீடியோ!

 
யானை

கோடை விடுமுறை ஆரம்பமாகிடுச்சு. கொடைக்கானல், ஊட்டி, முதுமலை, தேக்கடின்னு நிறைய இடங்களுக்கு குடும்பமா டூர் கிளம்பி இருப்பீங்க. உங்க சந்தோஷ மனநிலையில் நீங்களே கல்லெறிஞ்சுக்கிற மாதிரியான எந்தவொரு விஷயத்திலும் இறங்கிடாதீங்க. பொதுவா விலங்குகள் ரொம்பவே சென்சிட்டிவானவை. அதிலும், குரங்கு, யானை, புலி போன்றவை உதாசீனப்படுத்துதலை விரும்பாதவை. அவைகளிடம் அன்பாக இல்லைன்னாலும் உங்க வீரத்தைக் காட்டுறதா நெனைச்சுக்கிட்டு வம்பை விலைக்கு வாங்காதீங்க. இப்படித்தான் இளம்பெண் ஒருவர், தான் நன்கு பழக்கிய யானையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். யானைக்கு வழக்கம் போல வாழைப்பழத்தை உண்பதற்கு ஊட்ட வந்த இளம் பெண், யானைக்கு வாழைப்பழத்தைத் தராமல், அதை ஏமாற்றும் விதத்தில், வாழைப்பழத்தைக் காட்டி,  யானையை முன் நோக்கி, அவரது பாதையில் நடந்து வரவைக்கிறார்.


முதல் முறை ஏமாற்றும் போது, வீடியோவை உன்னிப்பாக கவனித்தால், யானை ஒரு எச்சரிக்கை செய்வதை கவனிக்க முடியும். அதன் பிறகு, மீண்டும் மீண்டும் பழத்தைத் தருவது போல நடித்து, ஏமாற்றுவதை  யானையால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏமாற்றும் அந்த இளம்பெண்ணை யானை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  'என்ன தான் யானையைப் பழக்கினாலும், அடக்கி வைத்தாலும் அதனை முட்டாளாக்குவதை அவை ஒரு போதும் அனுமதிப்பதில்லை. அவை மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்று' என்று இந்த வீடியோவைப் பகிர்ந்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

யானை

இளம்பெண்ணை முட்டி தூக்கி வீசியதில், அந்த பெண்ணுக்கு சிறு காயங்கள் தான் ஏற்பட்டுள்ளது. இதுவும் யானைக்கு தெரிந்தே செய்கிறது என்கிறார்கள். ஆபத்தில்லாமல், அதிகம் காயம் படாமல், தூக்கி வீசவும் யானைகளுக்கு தெரியும் என்கிறார்கள் வன ஆர்வலர்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web