நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்... பிரதமர் மோடியின் அசத்தல் அறிவிப்பு!
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாட, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பிரதமர் மோடி சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் படி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு, கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் இலவச உணவு தானிய விநியோகம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் நாளை முதல் இலவச பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கரீப் கல்யாண் யோஜ்னா (PM Garib Kalyan Yojana) குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இது குறித்து பிரதமர் பேசியதற்கு, சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸை குறிவைத்து பிரதமர் நரேந்திர மோடி, ஏழைகளுக்கு ஏமாற்றத்தைத் தவிர வேறு எதையும் காங்கிரஸ் ஒருபோதும் வழங்கியதில்லை என்று கூறினார். அதுமட்டுமல்ல, காங்கிரஸ் ஒருபோதும் ஏழைகளை மதிப்பதில்லை என்றும் பாஜக மக்களுக்கான அரசு என்றும் பிரதமர் கூறினார்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!