பிரபல விஜய் டிவி சீரியல் நடிகைக்கு திருமணம்.. குவிந்த பிரபலங்கள்!

 
ஷிமோனா

‘நாயகி’ தொடரில் அறிமுகமான நடிகை ஷிமோனாவுக்கு திருமணம் நடைப்பெற்றது. இவர் ‘பாவம் கணேசன்’ சீரியலிலும் நடித்து வருகிறார். இவருக்கு கோவையில் திருமணம் நடைபெற்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாவம் கணேசன்’ தொடருக்கு பின்னர், நடிகை ஷிமோனாவை வேறு சீரியலில் பார்க்க முடியவில்லை. 

Shimona

சீரியலில் நடிக்காமல் இருந்தாலும், நடிகை ஷிமோனா சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் நடிகை ஷிமோனா, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நிறுவனத்தில் பணியில் இருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து, தனக்கு நிச்சயதார்த்தம் நடத்த தகவலையும், திருமணம் குறித்த செய்தியையும் ரசிகர்களுக்கு அறிவித்தார்.

இந்நிலையில் கடந்த 27-ம் தேதி கோவையில் நடிகை ஷிமோனாவின் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கிரண் என்பவரை ஷிமோனா திருணம் செய்து கொண்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். 

மேலும், இவர்களுடைய திருமணத்திற்கு சின்னத்திரை நடிகர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இவருடைய திருமண உடையில் திருமண தேதி, கிரன்- ஷிமோனா ஆகியோரின் பெயர் இடம் பெற்று இருக்கிறது. தற்போது இந்த புகைப்படம் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web