எளிய பரிகாரம்.. கண் திருஷ்டி நீங்க வாரம் ஒரு முறை இதைச் செய்தா போதும்!

 
திருஷ்டி பரிகாரம்

இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் செய்து வாருங்க. அப்புறமா உங்களுடைய வாழ்க்கையின் வெற்றிக்கு இதுநாள் வரையில் தடைகளாக இருந்த விஷயங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி உங்கள் முன்னேற்றம் துவங்குவதைப் பார்ப்பீங்க. கண் திருஷ்டி நீங்குவதற்கான எளிய பிரார்த்தனை இது. ஆனா, எளிமையா இருந்தாலும் வலிமையான பிரார்த்தனை. இதைத் தொடர்ந்து செய்து பாருங்க.

வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நாள். வெள்ளிக்கிழமையில் மேற்கொள்ளப்படும் அம்மன் வழிபாடு சிறந்த பலன்களைத் தரும். இன்று, அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளலாம். வெள்ளிக்கிழமையில், அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனை வணங்கினால் நம்மையும், நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வார். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா தொடங்கியது! பக்தர்கள் உற்சாகம்!

வெள்ளிக்கிழமையான இன்று அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்தால் நன்மைகள் யாவும் கிடைக்கும். முடிந்தால், அம்மனுக்கு செந்நிற மலர்கள் சூட்டி வழிபடலாம். செவ்வரளி மாலை சார்த்தி அம்மனை இன்று வணங்குவது சிறப்பு.

வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில் அம்மன் கோவிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்க்கை சன்னிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களையும், கண் திருஷ்டியையும்  நீக்கும்.

தை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை! இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க!

வெள்ளிக்கிழமைகளில், அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். துர்க்கை சன்னிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபடுங்கள். வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். வீட்டில் மங்கள காரியங்கள் விரைவில் நடக்கும்.  

வெள்ளிக்கிழமைகளில், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல், கேசரி என ஒவ்வொரு வாரமும் ஏதேனும் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கி அம்மனை வழிபட்டு வந்தால் தனம், தானியம் பெருகி நிறைவான வாழ்க்கையை வாழலாம்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web