வெல்டன் ‘பிளாக் ஷீப்’... ‘நான் கோமாளி’ வெப் சீரிஸ்... நாம் உணர மறுத்த எளியவர்களின் வலிமையான வாழ்க்கை!

 
பிளாக் ஷீப் நான் கோமாளி

பிரபல பிளாக் ஷீப் ஓடிடி பிளாட்ஃபார்மில் ஒளிப்பரப்பாகி வருகிறது ‘நான் கோமாளி’ வெப் சீரிஸ். சாமானிய மனிதர்களின் கதையை, மனநிலையை, வாழ்க்கையை, அவர்களைப் பற்றிய புரிதலை என இந்த வெப் தொடரில் ஒளிப்பரப்புகிறார்கள். 

ஒவ்வொரு தொடரிலும் நாம் தினம் தினம் பார்த்து, பேசியோ அல்லது பழகியோ கடந்து வந்த மனிதர்களின் கதை. ஒவ்வொரு கதையுமே ஜெயகாந்தனின் ‘சமூகம் என்பது நாலு பேர்’ என்பதை நினைவு படுத்துகிறது. நாம் உணர மறுத்த எளியவர்களின் வலிமையான வலி மிகுந்த வாழ்க்கை. காக்கைக்கும், நாய்க்கும் சோறு வைக்கிற நாம் தான், நாம் சந்திக்கிற... தினம் தினம் பழகுகிற சக மனிதர்களுக்கு கொஞ்சமும் யோசிக்காமல் துரோகம் இழைக்கிறோம்... பணம், பதவி, சாதி என்று ஏதோதோ காரணங்களைச் சொல்லி நம் மனசுக்குள் விஷம் விதைக்கிறோம்.  அப்படி நாம் நிராகரித்தவர்களின் கதைகளைப் பேசுகிறது.

பிளாக் ஷீப் யூட்யூப் சேனலில், “நான் கோமாளி”  வெப் தொடரில் வெளியான போது சாமானியர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் நடிகர் ராம் நிஷாந்த் கவனத்தை ஈர்த்தார். இப்போது இந்த புதிய சீசனிலும் நடிகர் ராம் நிஷாந்தின் ராஜ்ஜியம் தொடர்கிறது. 

எந்தவிதமான அலட்டலும் இல்லாமல் படுஇயல்பாக இதயத்தின் இடப்பக்கம் குத்தி, வலது பக்கம் எடுக்கிற லாவகம் இயக்குநர் விசாகன் ஜெயகதிருக்கு வாய்த்திருக்கிறது. வலிய வேதனைகளைத் தொடரின் எந்த பகுதியிலும் திணிக்கவில்லை. வசனங்களில் ஆர்ப்பாட்டம் கிடையாது. ஆனால், தினம் தினம் நாம் சந்திக்கிற, நம்மில் ஒருவரைப் பற்றிய தொடர் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. 

நாம தினம் தினம் சந்தித்துப் பேசுகிற மனிதர்கள் தான். நம்ம கூடவே இருப்பாங்க. ஆனால், நமக்கு நன்கு அறிமுகமாகி, முகம் தெரிஞ்ச ஒவ்வொரு மனுஷனுக்குப் பின்னாடியும் நமக்கு சொல்லப்படாத  அல்லது நாம உணராத, தெரிந்து கொள்ள மெனக்கெடாத எத்தனையோ கதைகள் நிறைய இருக்கு. அது பயங்கரமாவும் இருக்கலாம்... சந்தோஷத்தையும் தரலாம்.. அட... உங்களோட ஒரு ஆறுதல் வார்த்தை அவங்களோட மொத்த வாழ்க்கையையுமே கூட பரமபத விளையாட்டுல சோழி சுழற்றிப் போடுகிற மாதிரி மாற்றி விடலாம். அவங்க எதிர்பார்க்கிறது எல்லாம், நிச்சயமா... ‘அய்யோ பாவம்னு பரிதாபப்பட வைக்கிற’ வார்த்தைகளைக் கிடையாது. அவங்க மேல நாம இத்தனை நாள் வச்சிருந்த கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டாலே இந்த தொடருக்கான வெற்றி தான்.

நான் கோமாளி

இந்த சமூகத்தை சாட்டையால் அடிக்கிற கதைகளும் இருக்கு. வழக்கம் போல விசிலடிச்சு கடந்து செல்கிற தொடர் கிடையாது. ஆனா, அனைவரும் நிச்சயமா பார்க்க வேண்டிய கதை.. ஏனெனில் நம்மைச் சுற்றி மட்டுமல்ல.. நம்ம உறவினர்களிலும், நண்பர்களுக்குள்ளும் இப்படி ஒரு சாமானியன் இருக்கலாம். அப்படி நாம பார்க்காத அல்லது நாம உணராத அவர்களின் வலியை, வாழ்வின் மறுப்பக்கத்தை ரொம்பவே நுட்பமான காட்சிகளோடு முகத்தில் அறைகிற லாவகத்தோடு பிளாக்‌ஷீப் ஓடிடியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘நான் கோமாளி’ வெப் சீரிஸில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விசாகன். 

டிரான்ஸ்ஜெண்டர், கார் டிரைவர், மெக்கானிக், மீனவன்னு ஒவ்வொரு தலைப்பும் எளிய மக்களுடைய கதைகளை சொல்லுது. இந்த சீரிஸோட பெரிய ப்ளஸ் நமக்கு அதிகம் பரிச்சியம் இல்லாத நடிகர்களை இந்தக் கதைகளில் நடிக்க வச்சதுதான். இதனால், அந்தக் கதைகளோட நாமளும் ஒன்ற முடியுது. நடிகர்கள், தொழில்நுட்பக் குழு என எல்லோருமே ஒரே மையப் புள்ளியில் இணைச்சு சிறப்பான படைப்பைக் கொடுத்துருக்காங்க.அந்த மையப்புள்ளி உங்களிடத்திலும் நிச்சயம் மாற்றத்தை உண்டு பண்ணும். 

தினமாலை ரேட்டிங் : 4/5

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web