அபார இசை ஞானம்... ட்ரேட் மார்க் சிரிப்பு... நடிகர் மதன் பாப் காலமானார்... இன்று இறுதி ஊர்வலம்!

 
மதன்பாப்

அபாரமான இசை திறமையைக் கொண்டவர் நடிகர் மதன் பாப். குமரிமுத்து, ஜனகராஜ் போலவே தமிழ் திரையுலகிற்கு தனது ட்ரேட் மார்க் சிரிப்பை வழங்கியவர். வாய்விட்டு சிரித்தாலும் அதை அழகாக்கியவர்.

நேற்று சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. கடந்த சில மாதங்களாகவே புற்று நோய்க்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5 மணி அளவில் காலமானார். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், காமெடி நடிகராகவும் நடித்தவர்.

 

 வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர்  நடிகர் மதன் பாப். இவர்  தனது தனித்துவமான சிரிப்பால், ரசிகர்களை கவர்ந்தவர். இசையமைப்பாளராக திரைவாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னாளில் குணச்சித்திர நடிப்பில் தனி முத்திரைப் பதித்தார்.

 

மதன் பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி.  இவருடைய  மனைவி சுசிலா, மகள் ஜனனி, மகன் அர்ஷித்.  மதன் பாப்பின் உடல் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது உடலுக்கு இறுதிசடங்குகள் செய்யப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது. திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?