அழகிகளுடன் உல்லாசம்... சபலப்பட்ட கல்லூரி மாணவரை வரவைத்து ரவுடிகள் கொடூரம்!
சென்னை மயிலாப்பூரில், சபலப்பட்ட கல்லூரி மாணவரை நள்ளிரவில் வரவைத்து, ரவுடிகள் அடித்து, இசைக்கல்லூரி மாணவரிடம் இருந்து செல்போன், பணம் பறித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மயிலாப்பூர் டி.எஸ்.வி. கோவில் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் அடையாறில் உள்ள இசை கல்லூரியில் படித்து வருகிறார்.இந்நிலையில் செயலி மூலமாக நள்ளிரவில் மாணவர் அழகிகளை தேடியுள்ளார். அப்போது அந்த செயலியில் இரண்டு வாலிபர்கள் பேசியுள்ளனர்.

அவர்கள் மயிலாப்பூர் மாடவீதிக்கு வந்தால் அழகிகளோடு உல்லாசமாக இருக்கலாம் என்று மாணவரிடம் கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய மாணவர், அவர்கள் சொன்ன இடத்திற்கு நள்ளிரவு நேரத்தில் சென்றுள்ளார். அப்போது அருகிலுள்ள பாழடைந்த கட்டிடத்தில் தான் அழகிகள் உள்ளனர், அங்கு செல்லலாம் என கூறி மாணவரை அழைத்துச் சென்ற இருவரும் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1,380 பணத்தை பறித்தனர்.

இது குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மாணவரிடம் கைவரிசை காட்டியது மயிலையின் மாங்கொல்லையை சேர்ந்த ரவுடிகள் சூர்யா, அஜய் என்பது தெரியவந்தது. இருவர் மீதும் பி.என்.எஸ். சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 126(2) சட்டவிரோதமாக தடுத்தல், 115(2) காயம் விளைவித்தல், 309(3) மிரட்டி பணம் பறித்தல், 351(2) மிரட்டல், 66(டி) தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்த போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
