உஷார் மக்களே... ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு... சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஒருவர் பலி!

 
சுபாஷ்

 தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் சதத்தைக் கடந்து வெயில் சுட்டெரிக்கும் நிலையில், தமிழகத்தைப் போல கடவுளின் தேசமான கேரளத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. கேரளத்தில் கொளுத்தும் வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கேரள மக்கள் காலை 11 மணி முதல் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. பாலக்காடு மற்றும் திருச்சூரில் அனல் காற்று வீசும் என மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருச்சூரில் கடந்த 5 நாட்களாக இயல்பை விட 5 டிகிரி அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருவதால், வெப்பச் சலனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலை

அதிக வெப்பம் காரணமாக பாலக்காடு மாவட்டத்தில் மக்களைப் பாதுகாப்பாக இருக்க கோரி, ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 2ம் தேதி வரை மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு தொடர  வேண்டும் என்றும், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நேரடியாக சூரிய ஒளி படாமல் இருக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

வெப்ப அலை

நேற்று அதிகபட்சமாக பாலக்காட்டில் 41.3 டிகிரி வெப்பநிலை உயர்ந்துள்ளது. இது இயல்பை விட 5 டிகிரி அதிகமாகும். திருச்சூரில் நேற்று 40 டிகிரி வெயில் பதிவானது. இது இயல்பை விட 5.5 டிகிரி அதிகமாகும். ஆலப்புழா மற்றும் திருச்சூரில் நேற்று ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. மே முதல் வாரம் வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.வெயிலுக்கு ஆலப்புழாவில் ஒருவர் வயரிங் பணியின் போது சுருண்டு விழுந்து பலியானார். மயங்கி விழுந்த சுபாஸ், ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!