டபுள்-டெக்கர் பேருந்து மீது சரக்கு ரயில் மோதியதில் 10 பேர் பலி... 61 பேர் படுகாயம்!
மெக்சிகோவில் டபுள்-டெக்கர் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி 10 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோ நாட்டின் மிச்சோகன் மாகாணத்தில் உள்ள மரவடியோ நகரில் இருந்து மெக்சிகோ சிட்டி நோக்கி 70க்கும் மேற்பட்டோருடன் டபுள் டெக்கர் பேருந்து சென்று கொண்டு இருந்தது.
அப்போது மெக்சிகோ சிட்டியின் வடமேற்கே உள்ள அட்லகோமுல்கோ நகரில் இன்று அதிகாலை ரயில் தண்டவாளத்தை பேருந்து கடக்க முயற்சித்த போது, அவ்வழியாக வந்த சரக்கு ரயில் மோதியது.

இதில் பேருந்து கடும் சேதம் அடைந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். 61 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. பேருந்து ஓட்டுநர், ரயில் வரும் சிக்னலை கவனிக்காமல் பேருந்தை இயக்கியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?
