நிரம்பி வழியும் 104 ஏரிகள் ... தொடர் கனமழை எதிரொலி..!!

 
ஒரே நாளில் நிரம்பிப் போன 100 ஏரிகள்- என்னா மழை..!!

தமிழகத்தில் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான்-நிகோபர் தீவுகளில்  காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.  சென்னையில் நேற்று முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.கிண்டி, வடபழனி, கோயம்பேடு, பாரிமுனை, திருமங்கலம், அண்ணாநகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாசாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு  பகுதிகளில் காலை தொடங்கிய மழை விட்டுவிட்டு பெய்தது.  புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர்  பகுதிகளிலும் விடாது தொடர்மழை பெய்தது.

தமிழகத்தில் பெய்த மழை அளவு நிலவரம்- பேரிடர் மேலாண்மை தகவல்..!!

இன்றும் சென்னையில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில்  தமிழகத்திலேயே சென்னையில் நேற்று மிக கனமழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மெரினா கடற்கரை பகுதியில் 12 செ.மீ மழையும், அம்பத்தூரில் 9.5 செ.மீ மழையும், மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் 9.4 செ.மீ மழையும்,கோடம்பாக்கத்தில் 8.5செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.  தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 301 கன அடி நீர்வரத்து உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையை சுற்றி அமைந்துள்ள   5 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 58 ஏரிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41 ஏரிகளும் நிரம்பியதாக நீர்வள ஆதாரத்துறை தெரிவித்துள்ளது.  இந்நிலையில்  கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளூர், காரைக்கால், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இடி மின்னல் மழை
மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம்  மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த கற்ற தாழ்வு பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web