ஆவினில் புதிதாக அறிமுகம்... பர்ப்பிள் பிரிமீயம் பாலுக்கு வரவேற்பு!

 
பர்ப்பிள் ஆவின்

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஆவின் நிறுவனம்,  செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் தினசரி  சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு விற்பனையை காட்டிலும் 3லட்சம் லிட்டர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள், பெரியவர்கள், செறிவூட்டப்பட்ட பால், திக்கான பால் என ரகம் வாரியாக தரத்தின் அடிப்படையில் நீலம், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு வண்ணங்களில் ஏற்கனவே ஆவின் பால் விற்பனை செய்து வருகிறது.

பர்ப்பிள் ஆவின்

இத்துடன் பால் பொருட்களான தயிர்,மோர் வெண்ணெய், நெய், ஐஸ்க்ரீம், ரசகுல்லா, பால்கோவா, பாதாம், பிஸ்தா பவுடர் மற்றும் பல இனிப்பு வகைகளையும் முகவர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், வைட்டமின் A மற்றும் வைட்டமின் D செறிவூட்டப்பட்ட  பசும் பால் புதிய ஊதா பர்ப்பிள் நிற பாலை ஆவின் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என ஆவின் நிர்வாகம்  தெரிவித்துள்ளது.  

பர்ப்பிள் ஆவின்

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு பாலில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் D செறிவூட்டம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஊதா நிற பாக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, இந்த பால் அரை லிட்டர் ரூபாய் 22 க்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த செறிவூட்டப்பட்ட பசும்பாலில் கொழுப்பு சத்தும் 3.5 சதவீதம் என்ற அளவில் நிறைந்து இருக்கும்.  முன்னதாக கடந்த சட்டசபை கூட்டதொடரில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி செறிவூட்டம் செய்யப்பட்ட பசும்பால் ஆவினில் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web