“1 கோடி பேர் வாக்குரிமையை இழப்பார்கள்..” சீமான் குற்றச்சாட்டு!

 
சீமான் சீமான்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியான SIR குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். ஒரே மாத காலத்தில் மாநிலம் முழுவதும் 6 கோடி வாக்காளர்களின் விவரங்களை சரிபார்ப்பது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பிய அவர், இந்த அவசர நடவடிக்கையால் குறைந்தது ஒரு கோடி பேர் தங்களது வாக்குரிமையை இழக்கும் நிலை உருவாகலாம் என்று எச்சரித்தார்.

சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “முன்பு வாக்காளர்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்; இப்போது ஆட்சியாளர்கள் வாக்காளர்களை தேர்வு செய்யும் நிலை உருவாகியுள்ளது. இதற்குப் பின்னணியில் SIR நடவடிக்கையே காரணம்” எனக் கூறினார். திடீரென போலி வாக்காளர்கள் இருப்பதாக பேசுவதும், அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரி பரிசோதனையை திணிப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள்!

அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்குச் சாதகமான வாக்காளர்களை மட்டும் பட்டியலில் வைத்துக் கொண்டு, மீதியை நீக்கும் சூழ்நிலையை SIR ஏற்படுத்தக்கூடும் என அவர் கவலை தெரிவித்தார். “கொள்ளத்தூரில் போலி வாக்காளர்கள் இருந்ததாக கூறினாலும் அந்தத் தொகுதியில் நடைபெற்ற வெற்றியை செல்லாது என அறிவித்தார்களா? ஈரோடு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட்டது தேர்தல் ஆணையத்துக்குத் தெரியவில்லை என நினைக்க முடியாது. இப்படியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மொத்த வாக்காளர்களின் சுயவிவரத்தையும் ஒரே நேரத்தில் மறுபரிசோதனை செய்வது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது” என்றார்.

சீமான்

நாம் தமிழர் போன்ற வளர்ந்து வரும் கட்சிகளுக்கு இத்தகைய விரைவான SIR நடைமுறை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும், வாக்காளர்களுடன் மீண்டும் மீண்டும் நேரில் தொடர்பு கொள்ள வேண்டிய சூழ்நிலையில் அரசியல் சமநிலை குலையும் என்றும் அவர் கூறினார். SIR நடைமுறையில் தாமதமின்றி திருத்தம் செய்ய வேண்டும்; குறைந்தபட்சம் ஒரு வருட அவகாசத்துடன் சரியான சரிபார்ப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் சீமான் முன்வைத்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!