அதிர்ச்சி... 2030க்குள் 3ல் ஒருவருக்கு கிட்டப்பார்வை ..குழந்தைகளை குறிவைக்கும் மயோபியா!

 
கிட்டப்பார்வை

 பிறந்த குழந்தை முதல் பல்லு போன வயதானவர்கள் கூட கையில் ஆண்ட்ராய்டு போன்கள் தான். இவை இல்லாமல் வாழ்க்கையே இல்லை. ஒரு நொடி கூட உயிர்வாழ முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இதனால் பலரும் மிக சின்னஞ்சிறு வயதிலேயே கண்ணாடி போட்டு விடுவதைப் பார்க்க முடிகிறது. இது குறித்து அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மயோபியா என்ற கிட்ட பார்வை குறைபாடு 2030க்குள் இந்தியாவில் 3பேரில் ஒருவருக்கு வரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கிட்டப்பார்வை


மயோபியா என்றால் கிட்டப்பார்வை. அருகில் உள்ளவை மட்டுமே   தெளிவாக தெரியும். தூரத்தில் இருப்பவை மங்கலாக தெரியும். கணினி மற்றும் செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.குறிப்பாக நகர்ப்புறத்தில் வசித்து வரும் 5 முதல் 15 வயதுடைய  குழந்தைகள் 3 பேரில் ஒரு வீதம் மயோபியா நோயால் பாதிக்கப்படும் நிலை உருவாகும். 2050க்குள் இந்த அளவு மேலும் அதிகரித்து  இருவரில் ஒருவருக்கு மயோபியா ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

கிட்டப்பார்வை

குழந்தைகள் செல்போன் மற்றும் கணினி பயன்படுத்துவதை விட்டு வெளியில் சென்று விளையாடுவதை பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள்  அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இயற்கை வெளியில் போதுமான நேரத்தை செலவழிக்காததும் செல்போன்களை நீண்ட நேரம் பார்ப்பதுமே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறியுள்ளனர்.  கண்களின் சீரான வளர்ச்சிக்கு சூரிய வெளிச்சம் என்பது அவசியம். அதுவும் குழந்தைகளுக்கு நிச்சயம் தேவை என்கின்றனர் மருத்துவ  வல்லுனர்கள்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!