மாணவர்கள் உற்சாகம்!! 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல்பாஸ்!!

மே மாதம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ளன. ஜூன் மாதம் தொடக்கத்திலேயே அடுத்த கல்வியாண்டு தொடங்கி விடும் இதன் அடிப்படையில் மே மாதத்திலேயே பள்ளி மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு விடும். ஏற்கனவே 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி அறிவிக்கப்பட்ட நிலையில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரை ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தேர்ச்சிகுறித்து புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 9ம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!