இப்பவே கண்ணக் கட்டுதே... தமிழகத்தில் மேலும் 10 சுங்கச்சாவடிகள்... வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி!

 
சுங்கச்சாவடி

 இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு   தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட  பதிலில், தமிழகத்தின் 2  மண்டலங்கள் உட்பட  26 இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை மண்டலங்களில், சுமார் 805 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மண்டலத்தின் கீழ் 28, சென்னை மண்டலத்தின் கீழ் 31 சுங்கச்சாவடிகள் என 59 சுங்கச்சாவடிகள் நடைமுறையில் செயல்பட்டு வருகிறது.

சுங்கச்சாவடி
அத்துடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக புதிய சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணிகளும்  நடைபெற்று வருகிறது. மதுரை திட்ட இயக்குநர் அலுவலகத்தின் கீழ் மதுரை மேலூர் முதல் காரைக்குடி வரை 4 வழிச்சாலையும், வாடிப்பட்டி முதல் தாமரைப்பட்டி வரை சுற்றுவட்டச் சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து  விரைவில் 2 புதிய சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரை 4 வழிச்சாலையும், மருங்கூர் கிராமத்தில் மற்றொரு சுங்கச்சாவடியும் அமைகிறது.

சுங்கச்சாவடி
திண்டுக்கல் முதல் தேனி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியும், சேவுகபட்டி பகுதியில் சுங்கச்சாவடியும் அமைய உள்ளது.   கமலாபுரம் முதல் ஒட்டன்சத்திரம் வரை தேசிய நெடுஞ்சாலையும், பாறைப்பட்டி பகுதியில் சுங்கச்சாவடியும், மடத்துக்குளம் முதல் பொள்ளாச்சி வரை நெடுஞ்சாலை அமைக்கும் பணியும், கோமங்கலம் புதூர் பகுதியில் சுங்கச்சாவடியும் அமையவுள்ளது. துவாக்குடி பகுதியில் மற்றொரு புதிய சுங்கச்சாவடி அமைய உள்ளது.  தமிழகத்தில் 59 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 10 சுங்கச்சாவடிகள் விரைவில் திறக்கப்படும் என்ற தகவலால்  வாகன ஓட்டிகள்  பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web