5 தங்கம் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்கள்.. உலகின் மிக வயதான வீராங்கனை 103 வயதில் காலமானார்!

 
ஆக்னஸ் கெலேட்டி

உலகின் வயதான ஒலிம்பிக் சாம்பியனான ஹங்கேரியின் ஆக்னஸ் கெலேட்டி மரணமடைந்தார். நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட அவர் தனது 103வது வயதில் இறந்தார். 1921 ஆம் ஆண்டு புடாபெஸ்டில் ஆக்னஸ் க்ளீன் என்ற யூதக் குடும்பத்தில் பிறந்த இவர், பின்னர் தனது குடும்பப் பெயரை ஹங்கேரிய மொழியில் கெலெட்டி என மாற்றிக் கொண்டார். அவர் ஜிம்னாஸ்டிக்ஸில் ஆர்வமாக இருந்தார் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாஜி ஆட்சியால் அவரது யூத பின்னணி காரணமாக விளையாட்டுகளில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும், அவர் நாஜிகளிடமிருந்து மறைந்து ரகசியமாக பயிற்சியைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது தந்தையும் பல குடும்ப உறுப்பினர்களும் ஹிட்லரின் மிகக் கொடூரமான அழித்தல் முகாமான ஆஷ்விட்ஸில் கொல்லப்பட்டனர். கெலெட்டி  இதில் இருந்து தப்பித்து, போருக்குப் பிறகு ஹங்கேரியின் மிகவும் வெற்றிகரமான ஜிம்னாஸ்ட் ஆனார். அவர் 1952 ஹெல்சின்கி மற்றும் 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்கில் 5 தங்கம் உட்பட 10 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றார்.

கெலேட்டி இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் ராபர்ட் பீரோவை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். கெலெட்டி உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார் மற்றும் இஸ்ரேலிய தேசிய அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். அவர் 2015 இல் ஹங்கேரிக்குத் திரும்பினார், மேலும் வரும் 9 ஆம் தேதி தனது 104 வது பிறந்தநாளைக் கொண்டாட இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web