மலாவி துணை அதிபர் உட்பட 10 பேர் விமான விபத்தில் பலி... பெரும் சோகம்!

 
மலாவி

 தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் மாயமானது. இதனையடுத்து   துணை அதிபர் டாக்டர் சவுலோஸ் சிலிமா உட்பட 10 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த விமானம் மலாவியின் தலைநகரான லிலோங்வேயில் இருந்து புறப்பட்டு  Mzuzu சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, ​​மோசமான வானிலைக்கு மத்தியில் ராடாரில் இருந்து காணாமல் போனதாகத் தெரிகிறது.


விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின்  எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், விமானத்தை தரையிறக்க விமான முயற்சித்தார்.  சில நிமிடங்களில் ரேடாரில் இருந்து விமானம் மாயமானது.  சில மணிநேரங்களுக்குப் பிறகு, தேடுதல் குழுக்கள் சிக்கன்காவா காட்டில் இடிபாடுகள் கண்டறியப்பட்டன.  அதில் இருந்த 10 பயணிகளும் இறந்துவிட்டனர் என செய்தி வெளியாகியுள்ளது.  இதனால் நாடு முழுவதும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.  இதனையடுத்து இந்நிகழ்வை ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா தேசிய துக்க தினமாக அறிவித்து, இறந்தவரின் நினைவைப் போற்றும் வகையில் இறுதிச் சடங்கு நடைபெறும் நாள் வரை கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனக் கூறியுள்ளார்.   .

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web