பட்டாசு விபத்தில் உயிரிழந்த 10 பேருக்கும் ஆலை உரிமையாளர் தலா ரூ5லட்சம் நிதியுதவி !

 
வெடி விபத்து
 சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேருக்கும் ஆலை உரிமையாளர் சார்பில் தலா ரூ.5லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.  அதன்படி உயிரிழந்த 10 பேருக்கு தலா ரூ.5லட்சம் காசோலையும், ரூ.50,000 ரொக்கத் தொகையும் பட்டாசு ஆலை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

 விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில்  தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென  ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த 7 அறைகளும் இடிந்து தரைமட்டமாகின. வானுயர எழுந்த தீயால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

பட்டாசு ஆலை

திரும்பும் திசையெல்லாம் கதறல் , மரண ஓலம் காண்பவர்கள் கண்களை குளமாக்கியது. வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில், பட்டாசு ஆலை மேற்பார்வையாளர் சுரேஷ்குமார்  கைது செய்யப்பட்டுள்ளார்.

முத்துக்கிருஷ்ணன்

 அலட்சியமாக செயல்பட்டதால் இந்த திடீர் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் பல  பிரிவுகளில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன், ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணனை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே ஆலையின் மேலாளர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது குத்தகைதாரர் முத்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.  இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web