10 வகுப்பு தேர்ச்சி போதும்... கிராம உதவியாளர் பணியிடங்கள்.... !
சென்னை மாவட்ட வருவாய் அலகில் மொத்தம் 20 கிராம உதவியாளா் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வட்டம் வாரியாக நியமனம் செய்யப்படும் கிராம உதவியாளா் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரங்கள் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்பட்டு உள்ளது.
கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி அந்தந்த தாலுகா பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். தமிழில் பிழையின்றி எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 21 முதல் 32 வரை
பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா் மரபினா், பட்டியல் இனத்தவா் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பில் தளா்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
இதற்கான விண்ணப்பத்தை https://chennai.nic.in2 என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை ஆவணங்களின் நகல்களை இணைத்து அக்டோபா் 1 ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்த காலிப் பணியிட விவரம், கல்வித் தகுதி, இதர தகுதிகள் மற்றும் இனச்சுழற்சி குறித்த போன்ற கூடுதல் தகவல் தேவைப்படுபவர்கள் மேற்கண்ட இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
