10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை... செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்!

 
இர்ஷாத் இர்ஷாத்
 

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் புதுப்பட்டினம் பகுதியில் வசித்து வருபவர்  அகமதுகபீர். இவரது 3வது மகன் 16 வயது இர்ஷாத்.  இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை தேர்வுக்காக மாடியில் படித்துக்கொண்டு இர்ஷாத் வெகுநேரமாகியும் கீழே வரவில்லை எனத் தெரிகிறது.

ஆம்புலன்ஸ்

இதனால் இர்ஷாத்தின் சகோதரர் மாடிக்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அங்கு சேலையில் தூக்கு மாட்டிக் கொண்ட நிலையில் இர்ஷாத் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.  உடனடியாக இர்ஷாத்தை மீட்ட அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே இர்ஷாத் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இர்ஷாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சிறுவன் பலி

இச்சம்பவம் குறித்து மேற்கொண்ட விசாரணையில், தற்போது தேர்வு நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக மழை பெய்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. விடுமுறை நாளில் தேர்வுக்கு படிக்காமல் செல்போனை பார்த்துகொண்டே இருந்து வந்துள்ளார் இர்ஷாத். இதனால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.  மனமுடைந்த இர்ஷாத் மாடியில் துாக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!