செம...10 வயது சிறுவன் தெருவோரக் கடையில் சப்பாத்தி விற்பனை... உதவிக்கரம் நீட்டும் ஆனந்த் மஹிந்திரா!

 
ஜஸ்பிரீத்

 ஆனந்த் மஹிந்திரா பரபரப்பு தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு அதற்கான கமெண்ட்கள் உதவிகள் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது டெல்லியில் உள்ள திலக்  நகர் பகுதியில் வசித்து வரும்  10 வயது சிறுவன் ஜஸ்பிரீத் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இந்த சிறுவனின் தந்தை மூளை கட்டியால் சமீபத்தில் உயிரிழந்தார்.


தந்தையின் மறைவுக்குபிறகு அவரது தொழிலான  தெருவோரம் முட்டை மற்றும் சப்பாத்தி போன்ற உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் சிற்றுண்டி கடையை சிறுவன் வைத்து நடத்தி வருகிறார். சிறுவனிடம் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவனுக்கு ஒரு தங்கையும் இருப்பதால்  அவரை பராமரிக்க வேண்டிய கடமை தனக்கிருப்பதாகக் கூறுகிறார்.  

சிறுவன் குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்ததாகத் தெரிகிறது.  இந்த வீடியோ சமீபத்தில் வைரலான நிலையில்  இதனைக் கண்ட ஆனந்த் மகேந்திரா, தனது பவுண்டேசன் உதவியுடன் சிறுவனின் படிப்பு மற்றும் எதிர்காலத்திற்கு உதவி செய்து அவரது வளமான வாழ்க்கைக்கு தாம் உறுதுணையாக இருப்பதாக உறுதி அளித்துள்ளார். அவரது அறிவிப்புக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web