அதிர்ச்சி.. 10 வயது சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம்... காதணிகள் கொள்ளை!
கேரள மாநிலம் படன்னாக்காடு மாவட்டத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பத்து வயது சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, தங்க காதணிகளையும் கொள்ளையடித்து சென்ற குடகு பகுதியைச் சேர்ந்த பி.ஏ.சலீம் (35) என்பவரை ரிமாண்ட் செய்து ஓஸ்துர்க் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூரில் இருந்து சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சலீமை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். வெள்ளிக்கிழமை இரவு அவர் காஞ்சங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார்.

கடந்த மே 15ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. படன்னக்காடு கடற்கரை பகுதியில் வீட்டில் உறக்கத்தில் இருந்து சிறுமியை கடத்திச் சென்ற குற்றவாளி, அருகில் உள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவளது தங்க காதணிகளை எடுத்துக் கொண்டு வயல்வெளியில் சிறுமியைப் போட்டு விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். சம்பவம் நடந்த ஒன்பதாம் நாள் குற்றவாளி கைது செய்யப்பட்டார். நேற்று காலை, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை, ஒழிஞ்சவலப்புவில் சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் அழைத்து சென்று, சாட்சியங்களை சேகரித்தனர். உள்ளூர்வாசிகள் சிலர் குற்றம் சாட்டப்பட்டவரைத் தாக்க முயன்றதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
சிசிடிவி காட்சிகள், மொபைல் போன் அழைப்புகள் மற்றும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலை ஆய்வு செய்ததில் சந்தேக நபர் அறிவியல்பூர்வமாக அடையாளம் காணப்பட்டதாக காசர்கோடு மாவட்ட காவல்துறை தலைவர் பி பிஜோய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வடக்கு மண்டல டிஐஜி தாம்சன் ஜோஸ், காசர்கோடு மாவட்ட காவல்துறைத் தலைவர் பி.பிஜோய் மற்றும் மூன்று டிவைஎஸ்பிக்கள் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
