ஸ்மோக் பிஸ்கட் விற்பனை செய்தால் 10 ஆண்டு சிறை.. உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!

 
ஸ்மோக்கிங் பிஸ்கெட்

 சின்னஞ்சிறு சிறுவர்கள் விதவிதமாக  பல வகையான பிஸ்கெட்களை விரும்பி சாப்பிடுவர். கிரீம் பிஸ்கெட், ஜாம் பிஸ்கெட், மில்க் பிஸ்கெட் என இதன் பட்டியில் ரொம்பவே நீ....ளம். அந்த வகையில் கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்டு சிறுவன் வலியால் துடிதுடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஸ்மோக் பிஸ்கட்டை  குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து என தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட்களை  குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். * திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உட்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம். திரவ நைட்ரஜன் உயிருள்ள திசுக்களுடன் தொடர்பு கொள்ளும் போது கடுமையான உறைபனியை ஏற்படுத்தும் அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளது.  திரவ நைட்ரஜனை குடிப்பதால் திசுக்கள் உறைந்து இரைப்பைக் குழாயை சிதைத்துவிடுகிறது.  உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது.

டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை, பேச்சு ஆகியவை பறிபோகும் ஆபத்துக்கள் ஏற்படலாம்.  சில நேரங்களில் உயிரிழப்புகள் நேரலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் தமிழகத்தில் குறிப்பாக  சென்னையில் திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என திடீர் ஆய்வுகள், சோதனைகள் நடத்த  அதிகாரிகளுக்கு தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web