100 பதக்கங்கள் பெற்று இந்தியா வரலாற்று சாதனை.. பிரதமர் மோடி புகழாரம்!!

 
100

சீனாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இந்த போட்டிகளில் இந்தியா இதுவரை 80 பதக்கங்களை வென்றுள்ளது. போட்டிகள் நிறைவடைய இன்றுடன் போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில்   இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018ல் இந்தியா72 பதக்கங்கள் பெற்றதே அதிகம் என்ற நிலை இருந்தது.


 

நடப்பாண்டில் அதை இந்தியா முறியடிக்கும் என தெரிகிறது. 18 தங்கம், 23 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 80  பதக்கங்களுடன்  இருந்தது.  மீதம் உள்ள  போட்டிகளில் இந்த எண்ணிக்கை சதமடிக்கலாம் என்கின்றனர் வீரர்கள் பயிற்சியாளர்கள். பாரா ஒலிம்பிக் போட்டிகள் அக்டோபர் 22ல் தொடங்கி அக்டோபர் 28 வரை  நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து மொத்தம் 303 வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா 100

இன்று நடை பெற்ற ஆசிய பாரா விளையாட்டில் ஆடவர் 400 மீட்டர் டி -47 தடகளத்தில் இந்தியாவுக்கு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. அதன்படி  49.48 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து இந்தியாவின் திலீப் மஹத் காவித் சாதனை படைத்துள்ளார். ஆசிய பாரா விளையாட்டில் இந்தியா இதுவரை 26 தங்கம், 29 வெள்ளி, 45 வெண்கலம் என 100 பதக்கங்களை வென்றுள்ளது. 

இது குறித்து இந்தியா பிரதமர் மோடி வீரர்களுக்கு வாழ்த்து பதிவு ஒன்றை ட்வீட் செய்துள்ளார். அதில் “ இந்தியாவிற்கு வரலாற்று சாதனையை தேடித் தந்த வீரர்களை நேரில் காண்பதற்கும் வாழ்த்துவதற்கும் மகிழ்ச்சியுடன் ஆவலாக காத்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்”.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web