கோவில் திருவிழாவில் விபரீதம்... தேனீக்கள் கொட்டியதில் 100 பேர் மருத்துவமனையில் அனுமதி!

 
தேன்

சேலம் மாவட்டம் அரூர் அருகே உள்ள ஈட்டியம்பட்டி கிராமத்தில் முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த விழாவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கோவில் விழா விறுவிறுப்பாக நடைபெற்றிக்கொண்டிருந்த போது, பண்டிகைக்காக பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.

தேன்

பட்டாசுகள் வெடித்து அந்த பகுதியில் இருந்த தேன் கூட்டில் புகுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தேன் கூட்டிலிருந்து கூட்டமாக கிளம்பிய தேனீக்கள் அங்கிருந்தவர்களை விரட்டிவிரட்டி கொட்டியது. இதில் சிறியவர், பெரியவர் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அனைவரும் தனியார் வாகனங்கள், அவர்களின் சொந்த வாகனங்கள், ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தேன்

முதல்கட்டமாக தேனீ கொட்டியதில் காயம் அடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தேனீ கொட்டியதில் காயமடைந்தவர்கள் பெரியளவில் பாதிப்பில் இருந்து தப்பியதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். எனினும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவில் திருவிழாவில் தேனீக்கள் கொட்டி 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web