போட்றா வெடிய... அம்பானி வீட்டு திருமணத்துக்கு 3 ஜெட் உட்பட 100 தனியார் விமானங்கள்!

 
அம்பானி


 இன்று இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் பிரம்மாண்அமாக நடைபெற்று வருகிறது. இந்த திருமணத்துக்கு வருகை தரும் விருந்தினர்களை அழைத்து வர 3 ஜெட் விமானங்கள் உட்பட 100 தனியார் விமானங்களை அம்பானி வாடகைக்கு எடுத்துள்ளார்.  
உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களுள் ஒருவர் முகேஷ் அம்பானி.இவரது  இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்டின் இளைய மகள் ராதிகா மெர்சண்டுக்கும் 2023 ஜனவரியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆனந்த் அம்பானி

பின்னர் திருமணத்துக்கு முந்தைய பல்வேறு கொண்டாட்டங்கள் பிரம்மாண்ட முறையில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.  இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இன்று மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்ட் கன்வென்ஷன் செண்டரில் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடக்கிறது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் அனைத்தும் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளன.

அம்பானி
சர்வதேச அளவில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு வருகை தரும் சிறப்பு விருந்தினர்களின் பயன்பாட்டிற்காக 3 ஃபால்கன் ரக ஜெட் விமானங்கள் (Falcon-2000 ) உட்பட 100 தனியார் விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. Club One Air நிறுவன தலைமை செயல் அதிகாரி ராஜன் மெஹ்ரா உறுதிப்படுத்தியுள்ளார்.
மும்பையில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட திருமண விழாவையொட்டி போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மும்பையில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.திருமணத்துக்கு முன்பு  கடந்த 2 வாரங்கள் நடைபெற்ற ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களில் ஜஸ்டின் பைபர், ரிஹன்னா, கெட்டி பெர்ரி, பேக் ஸ்டிரீட் பாய்ஸ் என உலகின் முன்னணி கலை நட்சத்திரங்களின் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது அனைவரின் கவனம் ஈர்க்கப்பட்டது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!