அட... 96 வயது காதலியை திருமணம் செய்யும் 100 வயது காதலர்!

 
அமெரிக்கா

அமெரிக்க விமானப்படையில் பணிபுரிந்த 100 வயதான ஹரோல்ட் டெரன்ஸ் தனது காதலியான 96 வயதான ஜீன் ஸ்வெர்லினை  ஜூன்   திருமணம் செய்ய உள்ளார். 2 ம் உலகப்போரில் பிரான்ஸ் நாட்டுக்கு அமெரிக்கப்படைகள் வந்திறங்கிய கடற்கரையில் ஹரோல்ட் மற்றும் ஜீனின் திருமண நிகழ்வு நடைபெற உள்ளது.


ஹரோல்ட் மற்றும் ஜீன் ஸ்வெர்லினின் காதல் கதை 2021ல் தொடங்கியுள்ளது. ஜீன் ஸ்வெர்லின் சமீபத்தில் தனது வாழ்க்கையில் ஒரு சிறப்புப் பாத்திரம் என்றும், அவளை முழு மனதுடன் விரும்புவதாகவும் ஹரோல்ட் கூறியுள்ளார்.அதே போல், ஹரோல்டை முழுமனதுடன் காதலிப்பதாக ஜீன் தெரிவித்துள்ளார். இருவருமே அமெரிக்கர்கள், இருவரும் கணவன் மற்றும் மனைவியை இழந்தவர்கள்.


ஹரோல்ட் 1942ல் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்துள்ளார்.  ஹரோல்ட் முன்னாள் மனைவி தெல்மாவுடன் 70 ஆண்டுகள் திருமண பந்தத்தில் இணைந்திருந்தார். மேலும் தெல்மா 2018 ல் உயிரிழந்தார்.  அதேபோல் 21 வயதில் திருமணம் செய்து கொண்ட ஜீன் ஸ்வெர்லின் 40 வயதில் கணவரை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web