வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை... முதல்வர் அதிரடி !

 
நிதிஷ்குமார்


 
பீகார் மாநிலத்தில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு பயன் அளிக்கும் வகையில்  மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார்  அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  "பீகாரில் 7 நிச்சய திட்டத்தின் கீழ்  செயல்படுத்தப்பட்ட 'முதல்வரின் நிச்சயம் சுயம் சகாயத பட்டா யோஜனா திட்டம் இப்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


இந்த திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி முடியாத வேலையில்லாத இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுய உதவித் திட்டத்தின் பலன், இப்போது கலை, அறிவியல் மற்றும் வணிகப் பிரிவைச் சேர்ந்த வேலையில்லாத ஆண் மற்றும் பெண் பட்டதாரி இளைஞர்களுக்கும் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், 20 முதல் 25 வயதுக்கு உட்பட்ட வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையாக வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்கள், பெண்களுக்கு வேலைக்கு தேவையான பயிற்சி பெறவும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகவும், அதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் இந்த உதவித்தொகை பயன் அளிக்கும் என முதல்வர் நிதிஷ் குமார் கூறினார்.


பீகார் மாநிலத்தில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கும்  நிலையில், முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை உயர்வு, கிராமப்புற சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு, மாணவர்களுக்கு கல்விக் கடன் வட்டி தள்ளுபடி,வேலையில்லாத பட்டதாரிகளுக்கு உதவித் தொகை என முதல்வர் நிதிஷ் குமாரால் வெளியிடப்படும் தொடர் அறிவிப்புகள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?