அதிர்ச்சி... 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மெட்டா! இந்திய இயக்குனரும் துரத்தியடிப்பு!

 
அம்ரிதா மெட்டா

மூன்று வருடங்களை நோக்கி அடியெடுத்து வைத்தும், கொரோனா வைரஸ் தொற்று சீர்குலைத்த பொருளாதார பாதிப்பு இன்னமும் பல நாடுகளில் சீரடையவில்லை. அடுத்தடுத்து பெரும் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் தங்களது ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்ற நிலையில், மெட்டா நிறுவனம் மீண்டும் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது. ட்விட்டர், ஸ்விக்கி, மெட்டா, அமேசான் நிறுவனங்கள் ஆட்குறைப்பு, பேஸ்புக் என பெரும் நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.  

வாட்ஸ் அப்

பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் என பல முன்னணி சமுகவலைத்தளத்தின்  தாய் நிறுவனமான  மெட்டா நிறுவனம் கடந்த வருடம் நவம்பரில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.  அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒட்டு மொத்த ஊழியர்களில் 13 சதவீதம் இது. அதன் பின்னர் மார்ச் மாத தொடக்கத்தில் 2வது கட்டமாக பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் லிஸ்ட் தயாரிக்கப்படுவதாக தெரிவித்திருந்த நிலையில், 5,000 பேரை பணி நீக்கம் செய்தது. தற்போது 10,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது மெட்டா நிறுவனம்.

அம்ரிதா மெட்டா

இதனை உறுதிப்படுத்தும் வகையில், பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்டா ஊழியர்கள் லின்க்டுஇன் தளத்தில் பணிநீக்க நடவடிக்கை குறித்து பதிவிட்டு வருகின்றனர்.  இந்த முறை பணி நீக்க நடவடிக்கையில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய இயக்குனரும் இந்த பணிநீக்க நடவடிக்கையில் இருந்து தப்பவில்லை.  இந்தியப் பிரிவின் இயக்குனர் (சட்ட) அம்ரிதா முகர்ஜியும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web