நெல்லையப்பர் கோவிலில் 1008 பெண்கள் சுமங்கலி பூஜை... வரலட்சுமி நோன்பு கோலாகலம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோவிலில் வரலட்சுமி நோன்பு விமரிசையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் 1008 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு நெல்லையப்பர் திருக்கோவில் சார்பில் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் 1008 பேர் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதற்காக ஆயிரம் கால் மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

அங்கு அமைக்கப்பட்டிருந்த மகாலட்சுமி விக்கிரகத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் 1008 பெண்கள் வரிசையாக அமர்ந்து தங்கள் முன்னால் கலசத்தில் அம்பாளை பிரார்த்தனை செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து குங்கும அர்ச்சனை செய்யப்பட்டு சுவாமி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் மற்றும் மகாலட்சுமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
