இஸ்ரேல் தாக்குதலால் 1,060 பேர் உயிரிழப்பு... ஈரான் அதிர்ச்சி தகவல்!

 
இஸ்ரேல் தாக்குதலில்

இஸ்ரேல் காசா போர்  ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில்   ஈரானும் 2024ல்  இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணை  தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும்  வகையில், ஈரான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது.

காசா இஸ்ரேல்

ஈரானின் ராணுவ தளவாடங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் மீது "ஆபரேஷன் ரைசிங் லயன்" எனும் பெயரில் இஸ்ரேல் ஜூன் 13ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரான் - இஸ்ரேல் இடையில் போர் தொடங்கிய நிலையில், இருநாடுகளும் ஏவுகணைகள், ட்ரோன்கள்  மூலம் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தன. இந்தப் போர்  ஜூன் 24ம் தேதி 12ம் நாளை எட்டியதுடன், போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.  இதை, இருநாடுகளும் ஏற்றுக்கொண்டன. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளதால், போரில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஈரான் அரசு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது.

ஈரான் இஸ்ரேல்

இந்நிலையில், ஈரானின் தியாகிகள் மற்றும் படைவீரர்கள் அறக்கட்டளையின் தலைவர் சயீத் ஒஹாதி, அந்நாட்டின் அரசு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.   இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போரில் சுமார் 1,060 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்திருப்பதால், பலி எண்ணிக்கை 1,100 ஆக அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தப் போரில் ஈரானில் சுமார் 435 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 1,090 பேர் கொல்லப்பட்டதாகவும், 4,475 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் வாஷிங்டனைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் அமைப்பு கூறியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?