நாளை முதல் 10 நாட்கள் கொடைக்கானலில் திருவிழா... மலர் கண்காட்சி, கோடை விழா.. குவியும் சுற்றுலா பயணிகள்!

 
மலர் கண்காட்சி

நாளை கொடைக்கானலில் 61வது மலர்கண்காட்சி துவங்குகிறது.  நாளை துவங்கி அடுத்த 10 நாட்களுக்கு இந்த மலர் கண்காட்சி நடைப்பெற உள்ள நிலையில், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர்.

கடந்த வாரம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரம்மாண்டமான மலர்க் கண்காட்சி தொடங்கியுள்ள நிலையில், ஊட்டியைத் தொடர்ந்து கொடைக்கானலிலும் மலர்க் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 61வது மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா2024 ஆகியவை நாளை மே 17ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைப்பெறுகிறது. 

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் மே 17 முதல் 26 வரை தொடர்ந்து 10 நாட்கள் தோட்டக்கலைத்துறை மலர்க்கண்காட்சியும், 17.05.2024 முதல் 26.05.2024 வரை 10 நாட்கள் சுற்றுலாத்துறை மூலமாக கோடைவிழாவும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலர் கண்காட்சி
அத்துடன் இந்த  10 நாட்களும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி. நாய்கள் கண்காட்சி என கலை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அனைத்து உள்நாட்டு மற்றும் வெளியாட்டு சுற்றுலாப் பயணிகளையும், திண்டுக்கல் மற்றும் அருகிலுள்ள மாவட்ட பொதுமக்களையும் மற்றும் கொடைக்கானல் நகர்ப்பகுதி பொதுமக்களையும், மாவட்ட நிர்வாகம் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

மலர் கண்காட்சி

மேலும், நிகழ்ச்சிகள் தொடர்பான விபரங்களுக்கு, சுற்றுலா அலுவலர் சுற்றுலா அலுவலகம், கொடைக்கானல்-624101 என்ற முகவரியில் நேரிலோ, 04542-241675 என்ற அலுவலக தொலைப்பேசி எண் மற்றும் 9176995867 என்ற கைப்பேசி எண் வாயிலாகவோ மற்றும் கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநரை 9092861549 என்ற கைப்பேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்..

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web