இன்று காலை வெளியாகிறது 10 மற்றும் 11 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள்! எத்தனை மணிக்கு எப்படிப் பார்ப்பது?!

 
பள்ளி மாணவி விடுமுறை உற்சாகம்

தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின்றன. இன்று காலையில் 10 மணிக்கு 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படுகின்றன.

தேர்வு

10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் கடந்த ஏப்ரல் 6ம் தேதி துவங்கி ஏப்ரல் 20ம் தேதி வரையில் நடைப்பெற்றன. 3986 தேர்வு மையங்களில் நடந்த இந்த தேர்வினை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதி உள்ளனர்.

அதே போல, ப்ளஸ்1 தேர்வுகளும் இதே சமயத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.  சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியான நிலையில் மாநில பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

தேர்வு

10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை மே 19ம் தேதி வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். தவிர, பள்ளிகளில் மாணவர்கள் கொடுத்திருக்கும் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web