அசத்தல்... 2 கைகளையும் இழந்த நிலையில் 10 ம் வகுப்பு மாணவர் பள்ளியிலேயே முதலிடம்!

 
க்ரித்திவர்மா

சாதனை புரிய எந்த வயதும் தடையில்லை. உடலில் உள்ள குறைபாடுகளும் குறையே இல்லை. என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர்.  உடலில் ஏதேனும் குறைகள் இருப்பினும் மாற்றுத் திறமைகள் நிறைந்தவர் என்பதை குறிப்பிடவே  மாற்றுத் திறனாளி எனக் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் இன்று வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் மொத்தம் 91.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொதுத் தேர்வு

10ம் வகுப்பு பொது தேர்வில் 94.66% மாணவிகளும், 88.16% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவர்களை விட மாணவிகள் 6.5% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு 90.7% மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில், நடப்பாண்டில்  மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளது.  தமிழ் பாடத்தில் எந்த மாணவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்கவில்லை. இந்த தேர்வில் மாவட்ட வாரியாக 97.67% பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்திலும் 83.54% சதவீத தேர்ச்சியுடன் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளது.  திப்பெண்கள் இன்று காலை 10 மணிக்கு மாணவர்களின்  மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.  

தேர்வு

பொதுத் தேர்வை எழுதியிருந்த  9.4 லட்சம் மாணவ மாணவியர்களில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.  இந்நிலையில், 2 கைகளை இழந்த 10ம் வகுப்பு மாணவர் ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் செயல்பட்டு வரும் நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவன்  க்ரித்தி வர்மா.

இவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். அவருடைய  தாயார் கூலி வேலைக்கு சென்று படிக்க வைத்து வருகிறார். க்ரித்தி வர்மா 2 கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி  என்பது குறிப்பிடத்தக்கது. கைகள் இல்லாமலேயே நம்பிக்கையுடன் படித்து முன்னேற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இந்த மாணவன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த மாணவனுக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web