ஜூன் 30 வரை 10 ம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்கள் பள்ளிக்கு வர உத்தரவு!!

 
மாணவிகள்

தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை அரசு பள்ளிகளில் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு திட்டங்களையும், முயற்சிகளையும் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இடையில் நின்ற பள்ளி பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க தொடர்ந்து கற்போம் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இது குறித்து   மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு  சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்  தமிழகம் முழுவதும் 6 முதல் 18 வயதுடைய, பள்ளி செல்லாத மற்றும் இடைநின்றக் குழந்தைகள் இவர்களுடன் மாற்றுத் திறனாளி குழந்தைகள்  என எந்த காரணத்திற்காக பள்ளியில் இருந்து நிறுத்தப்பட்டிருந்தாலும்  அவர்களைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாணவிகள் அரசு பள்ளி
 இவர்களுடன் ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்கள், பள்ளிக்கல்வியைப் பாதியில் கைவிடும் மாணவர்கள்  அவர்களுக்குத் தேவையான உதவிகளையும், சிறப்புப் பயிற்சிகளையும் வழங்கி, அவர்களை படிப்பைத் தொடர செய்ய வேண்டியது அவசியம். இதனை கருத்தில் கொண்டு   ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் ‘தொடர்ந்து கற்போம்’ என்ற முன்னோடித் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை

இந்த திட்டம் 2023-2024ம் கல்வி ஆண்டில், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் மூலம்  பள்ளிஅளவில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு, அந்தந்த உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு, ஜுன் 1 முதல் 30ம் தேதி வரை 30 நாட்களுக்கு, திங்கள் முதல் சனி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web