சப்பாத்தி தராததால் விபரீதம்... 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
சப்பாத்தி

இன்றைய இளம் தலைமுறையினர் எதற்கெடுத்தாலும் மன அழுத்தம். கேட்டதெல்லாம் கிடைத்து விட வேண்டும். கிடைக்கவில்லை எனில் உடனடியாக விபரீத முடிவுகளை எடுத்து விடுகின்றனர். இதனால் பெற்றோர்களும், உடன் பிறந்தவர்களும் எத்தனை பாதிக்கப்படுவார்கள் என எண்ணிப்பார்ப்பதே இல்லை . அதிலும்பள்ளி கல்லூரி மாணவர்களின் இந்த செயல் தொடர்கதையாகி வருவது கவலையில் ஆழ்த்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேலபெருவிளையில் வசித்து வருபவர்  கணேசன். இவரது மனைவி தங்ககனி. இவர்களுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள்கள் இருவரும்  திருமணம் முடிந்து சென்று விட்டனர்.  மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.  கடைசி மகள் 10ம் வகுப்பும், அதற்கு முந்தையவள் 12 ம் வகுப்பும்படித்து வருகின்றனர். 

தற்கொலை

இந்நிலையில் நவம்பர் 2ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் தங்கை அம்மாவிடம்  பசிக்கிறது சாப்பிட ஏதாவது கொடுங்க எனக் கேட்டிருக்கிறார். அதற்கு தாய் சமையல் அறையில் உள்ள சப்பாத்தியை எடுத்துச் சாப்பிடச் சொல்லிக்  கூறியிருக்கிறார். அங்கு சென்று பார்த்தபோது, அக்கா சப்பாத்தியைச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள். 

அதைப் பார்த்த தங்கை அக்காவிடம் தனக்கும் கொஞ்சம் சப்பாத்தி கொடுக்க சொல்லியிருக்கிறார். ரொம்ப பசிக்குது கொஞ்சமாச்சும் மிச்சம் கொடு என கெஞ்சியிருக்கிறார்.  ஆனால், அக்கா அதைக் கொடுக்க மறுத்து எஞ்சிய சப்பாத்தியையும் தானே சாப்பிட்டு விட்டார்.  இதனால் சிறுமி பெரும் ஏமாற்றம் அடைந்தாள்.  10வகுப்பு படிக்கும் அந்த சிறுமி கோபித்துக்கொண்டு வீட்டில் ஒரு அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டுவிட்டார்.

ஆம்புலன்ஸ்

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவே இல்லை. அதிர்ச்சியில் அம்மாவை அழைத்து விபரம் கூறினார்.  அம்மாவும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் எத்தனை முறை கதவைத் தட்டிக் கூப்பிட்டும் திறக்கவில்லை. இதனால், அறையின் மேற்புறத்தில் இருந்த ஓட்டைப் பிரித்துப் பார்த்தனர். அங்கு  சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயல்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும்   அவர் திங்கட்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து  இறந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அக்கா சப்பாத்தி கொடுக்காமல் சாப்பிட்டுவிட்டதால் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web