செல்போன் பார்ப்பதை தாய் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை!

 
மதுமிதா
 

 

10ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால், பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த மாணவி பாடங்களைப் படிக்காமல் எப்போதும் செல்போனையே பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. படிக்காமல் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததை தாய் கண்டித்ததால் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆம்புலன்ஸ்

தேனி மாவட்டம் காமயகவுண்டம்பட்டி, கருமாரிபுரத்தை சேர்ந்தவர் சங்கிலி (56). கட்டிட தொழிலாளியான இவரது மனைவி ஈஸ்வரி. இவர் வீட்டினருகிலேயே மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் 2வது மகள் மதுமிதா (14) ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

போலீஸ்

இந்நிலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த மதுமிதா, படிக்காமல் செல்போன் பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அவரது தாய், செல்போன் பார்ப்பதை நிறுத்தி விட்டு படிக்குமாறு கண்டித்தார். இதனால் மனமுடைந்த மதுமிதா தற்கொலை செய்ய முடிவு செய்தார். 

அதன்படி நள்ளிரவில் பெற்றோர் தூங்கியதும், வீட்டின் ஒரு அறையில் மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?